நடிகர் தனுஷ், வெங்கி அட்லுரி இயக்கும் ‘வாத்தி’ படத்தை முடித்துவிட்டார். அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் ஜனவரியில் தொடங்க இருக்கிறது.தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இந்தத் திரைப்படம் 1950 காலகட்ட அரசியல் பின்னணி கதையை கொண்டது என்கிறார்கள். இதில், ராஷ்மிகா மந்தனா, தனுஷ் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.