சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. ஒரு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்த நாட்களில் மிகப் பெரிய அளவில் உச்சம் அடைகிறது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, சவரன் ரூ.38,080-க்கு விற்பனையானது. இது வாடிக்கையாளர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அதற்கு அடுத்த நாளே தங்க விலை சவரனுக்கு ரூ.38,160 ஆக அதிகரித்தது. இதனால் நகை பிரியர்கள், குறிப்பாக இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, சவரன் ரூ.38,360-க்கும், ஒரு கிராம்  ரூ.4,795-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை பிரியர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 160 – ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் சவரனுக்கு ரூ.38,200-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,775-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.67.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.67,000-க்கும் விற்பனையாகி வருகிறது. ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here