மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 295 புள்ளிகள் உயர்ந்து 60,375 ஐ நெருங்கி இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 18,049 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தின் முதல்நாள் வர்த்தகம் உயர்வுடனேயே தொடங்கின. காலை 10:32 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 107.25 புள்ளிகள் உயர்வடைந்து 60,368.43 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 2.15 புள்ளிகள் உயர்வுடன் 17,958.75 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் சாதகமான குறிப்புகளால் இந்திய பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியிருக்கிறது. ஹெச்டிஎஃபி வங்கியின் சாதமான அறிக்கை லாப போக்குக்கு வழிவகுத்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை விப்ரோ, ஹெச்டிஎஃபிசி, ஐடிசி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. நெஸ்ட்லே இந்தியா, எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ்,ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல், எம் அண்ட் எம் பங்குள் சரிவில் இருந்தன.