இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்த நாட்களில் மிகப் பெரிய அளவில் உச்சம் அடைகிறது. இம்மாத தொடக்கத்திலே தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அடுத்த நாளே தங்க விலை சவரனுக்கு ரூ.38,336 ஆக அதிகரித்தது.
இதனால் நகை பிரியர்கள், குறிப்பாக இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், கடந்த மாதம் இறுதி நாட்களில் தங்கத்தின் விலை எதிர்பாரா வகையில் கடும் இறக்கம் கண்டது. இதனால் பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியில் அடைந்தனர். ஆனால், இதற்கு நேர்மாறாக இம்மாத்தின் தொடக்கம் முதலே, தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறியது. ஜூலை 4,5 தேதிகளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,400-க்கு அதிகமாகவும், ஒரு கிராம் ரூ.4,800-க்கு மேலாகவும் விற்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.104 உயர்ந்து, சவரனுக்கு ரூ.37,512-க்கும், ஒரு கிராம் ரூ.4,689-க்கும் விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்க்கெட் விடுமுறை; எனவே நேற்றைய தினம் தங்க விலையில் மாற்றமில்லை. ஆனால், இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்கப்படுகிறது. ஆம்! இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.37,440-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.4,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து, ஒரு கிராம் ரூ.63-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.63,000-க்கும் விற்கபட்டு வருகிறது.