சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக பொதுக்குழு கூட்ட மேடைக்கு பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் வந்தனர். பழனிசாமி மேடைக்கு வந்ததை அடுத்து பன்னீர்செல்வமும் மேடைக்கு வந்தார். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படங்களுக்கு பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.