ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளார் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன எலான் மஸ்க். அதோடு அந்நிறுவனத்தை வாங்கிய முதல் நாளான இன்றே சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்துள்ளார். அவர் தனது பதவியை இழந்திருந்தாலும், ட்விட்டர் நிறுவன கொள்கையின்படி நிதி ஆதாயம் பெறுவார். அது குறித்து பார்ப்போம்.
கடந்த ஏப்ரல் இறுதியில் சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கி இருந்தார். இருந்தாலும் இரு தரப்புக்குமான டீல் இழுபறியாக இருந்து வந்தது. இது தொடர்பாக நீதிமன்றம் வரை பஞ்சாயத்து சென்றிருந்தது. இந்த நிலையில் ஒருவழியாக ட்விட்டர் இப்போது மஸ்க் வசம் ஆகியுள்ளது.
தான் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் முக்கிய பொறுப்புகளை கவனித்து வந்த தலைகளை மஸ்க் களை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதில் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வாலும் உள்ளார். மஸ்க் நடவடிக்கை காரணமாக பராக் தனது பதவியை இழந்தாலும், அவருக்கு வெகுவான நிதி ஆதாரம் இருக்கும் என்றே தெரிகிறது. அதற்கு ட்விட்டர் நிறுவனத்தின் கொள்கைப்படி பணி நீக்கத்திற்கான ஊதியம் வழங்கப்படும்.