தமிழ்நாட்டில் பேனர் கலாச்சாரத்தால் பல உயிரிழப்புகள் நடந்துள்ளன. அதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் பேனர் வைக்க வேண்டாம் என கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் தொண்டர்கள் பேனர் கலாச்சாரத்தை விடாமல், கட்சி நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைத்தவாறு இருக்கிறார்கள். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திமுகவினருக்கு அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி, ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாது என அறிவுறுத்தி இருக்கிறார்
திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் உடனடியாக அதனை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அதற்கு பதிலாக கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.