சென்னை: மாணவர்களாகிய நீங்கள்தான் மாநிலத்தின் அறிவுசார் சொத்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதல்வர், மாணவர்கள் அனைவரும் ஒவ்வொரு துறைகளிலும் முதல்வராக வரவேண்டும் என்பதற்காகவே தான் நான் முதல்வன் திட்டம். உயர்கல்வி, வேலைவாய்ப்புடன் கைநிறைய ஊதியம் பெறுவது மட்டுமல்ல; மாநிலத்தை உயர்த்த உங்களது ஆற்றல் பயன்பட வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.