தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது,
‘‘2-ம் தேதி புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் அதி கனமழை பெய்யக் கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்ன லுடன் கன முதல் மிக கனமழையும், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும் பெய்யக் கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்’’ என்றார்.