செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் 12 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்கும் பணி நிறைவடைந்து அச்சிடும் பணி நடைபெறுகிறது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சங்க இலக்கியங்களை இந்திய மொழிகளிலும் அயலக மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து, அனைவருக்கும் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழரின் பண்பாட்டை தெரிவிக்கும் நடவடிக்கையை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
ஹிந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஒடியா, நேபாளி, உருது, மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில் திருக்குறள் மொழிப்பெயர்க்கப்படுகிறது.
இந்த மாதத்திற்குள்ளாக அச்சிடும் பணி நிறைவடைந்து ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.