உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் அறிவுரை வழங்கியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா அடுத்தடுத்து தாக்குதல் நடத்திவருவதால் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டு உலகநாடுகள் கவலை அடைந்துள்ளன.
ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலை அடுத்து இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்:
உக்ரைனில் போர் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், இந்திய குடிமக்கள் உக்ரைனுக்கு உள்ளே அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உக்ரைனில் வாழும் இந்தியர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. உக்ரைனில் வாழும் இந்தியர்கள் தங்கள் நிலை குறித்து இந்திய தூதரகத்திற்கு உரிய தகவல் தெரிவிக்குமாறும், தேவைப்பட்டால் தூதரக அதிகாரிகளை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.