ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று நத்தம் விசுவநாதன் வற்புறுத்தியதாக தகவல் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை போல நாடாளுமன்ற தேர்தலையும் பழனிச்சாமி தலைமையில் எதிர்கொள்ள தயார் என்று நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என்று எடப்பாடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பொருட்களில் போலி இருப்பது அரசியலில் போலி ஓ.பன்னீர்செல்வம் என்றும் நத்தம் விசுவநாதன் விமர்சித்ததாக தகவல் அளித்துள்ளனர். நத்தம் விஸ்வநாதன் மட்டுமின்றி பெரும்பாலான நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.
பழனிச்சாமி பேச்சு
அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கின்றாம் என்று பழனிச்சாமி கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்க அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பழனிச்சாமி உத்தரவு அளித்துள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தையை கட்சி தலைமை பார்த்துக் கொள்ளும் என்று பழனிச்சாமி கூறியுள்ளார்.
எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அதிமுக தலைமை முடிவு செய்யும் என்று மாவட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மக்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாக்குச்சாவடி அளவில் அதிமுகவை வலுப்படுத்த வேண்டும். ஓபிஎஸ் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டியுள்ளார் என்று பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.