Anna University Results 2021: அண்ணாப் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
அண்ணாப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட வேண்டிய பருவத் தேர்வுகள் கொரோனா பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்டத் தேர்வுகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆன்லைன் முறையில் நடைபெற்றன.
அப்போது நடத்தப்பட்ட பி.இ, பிடெக், எம்.இ, எம்டெக் படிப்புகளின் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கடந்த ஏப்ரல் 11-ம் தேதி அண்ணாப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
அந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. அதனையடுத்து, அந்த தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான 2020ம் ஆண்டுக்கான நவம்பர், டிசம்பர் மற்றும் 2021ம் ஆண்டுக்கான ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. தேர்வு முடிவுகளை அண்ணாப் பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.