உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா ஜூலை 3 முதல் 11ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆனி ஊஞ்சல் உற்சவ விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆனி ஊஞ்சல் உற்சவ விழா ஜூலை 3ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. ஜூலை 11ஆம் தேதி வரை 9 நாட்கள் இவ்விழா நடைபெறவுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாள்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரங்ளில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர்.
ஜூலை 5ஆம் தேதி ஆனி உத்திரத்தை முன்னிட்டு அன்று இரவு முதல் 6ஆம் தேதி காலை 7 மணி வரை வெள்ளியம்பல நடராஜருக்கு திருமஞ்சனம் மற்றும் கால பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.