ஆந்திரப் பிரதேச மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள ஜங்கரெடிகுடெம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு பொது  தேர்வு எழுதுவதற்காக வந்த மாணவி ஒருவருக்கு அங்கு பணியில் இருந்த ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட புகாருக்கு ஆளான ஆசிரியர் சீனிவாஸ், இரண்டு நாட்களுக்கு முன் அங்கு தேர்வு எழுத வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அந்த மாணவி இந்த சம்பவத்தை பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். மாணவியின் புகாரைக் கேட்டு பள்ளிக்கு வந்த வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் ஆசிரியர் சீனிவாஸ் மீது தாக்குதல் நடத்தினர்.

தாக்குலுக்கு ஆளான ஆசிரியரை அங்கிருந்த சக ஆசிரியர்கள் அவரை தாக்குதலில் இருந்து காப்பாற்றி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினரை தடுத்து சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், மற்ற ஆசிரியர்களின் கோரிக்கையை கேட்காமல் மாணவியின் தரப்பினர் ஆவேசத்துடன் ஆசிரியர் சீனிவாஸ் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

இதை அடுத்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவலர்கள் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மாணவியின் புகார் உறுதி செய்யப்படும் நிலையில், ஆசிரியர் கைது செய்யப்படுவார் என பெற்றோருக்கு உறுதி அளித்துள்ளது.