பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை மத்திய அரசு குறைத்துள் ளது. இதனால் ஏற்படும் இழப்பு முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது. மாநில அரசுகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6-ம் குறைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த வரிகுறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் மாநில அரசுகளுக்கு வரிஇழப்பு ஏற்படும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கு விளக்கம் அளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: மக்கள் நலனை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடிவு செய்தார். இதன்படி கடந்த 21-ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டது. ஆனால் சிலர் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அவர்களோடு சில அடிப்படை உண்மைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அடிப்படை கலால் வரி (பிஇடி), சிறப்பு கூடுதல் கலால் வரி (எஸ்ஏஇடி), சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரி (ஆர்ஐசி), வேளாண்மை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரி (ஏஐடிசி) ஆகியவை இணைந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை நிர்ணயிக்கின்றன.

இதில் அடிப்படை கலால் வரி மட்டுமே மாநிலஅரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. மற்ற 3 வரிகளும் பகிர முடியாதவை. தற்போது மத்திய அரசு சார்பில் சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரி (ஆர்ஐசி) மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. இதனால்ஏற்படும் வரி இழப்பு முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது. தற்போதைய கலால் வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஓராண்டில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். கடந்த நவம்பர் 21-ம் தேதியும் இதே நடைமுறையில் பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைக் கப்பட்டது. இதன்காரணமாக மத்திய அரசுக்கு ஓராண்டில் ரூ.1.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். ஒட்டுமொத்தமாக ரூ.2.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். இந்த வரி இழப்பு முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது.

ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத் தின்படி கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்ச்சி திட்ட செலவு ரூ.49.2 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம்
ஆண்டு வரையிலான பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் வளர்ச்சி திட்ட செலவு ரூ.90.9 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் மானியங் களுக்காக ரூ.13.9 லட்சம் கோடி மட்டுமே செலவிடப்பட்டது. தற் போது பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் உணவு, எரிபொருள், உரங்களுக்காக ரூ.26.3 லட்சம் கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.