தென்தமிழகத்தில் அமைந்துள்ள விருதுநகருக்கும் விருதுநகர் வாழ்மக்களுக்கும் எப்போதும் மூன்றே காலநிலை தான் ஒன்று மிதமான வெயில், இரண்டு அதிகமான வெயில், மூன்று மிகஅதிகமான வெயில்.
இப்படி வெயிலுக்கும், வெக்கைக்கும் பழகிய இவர்களை வெயில் மனிதர்கள் என்பதில் சந்தேகமில்லை. கந்தக பூமியான இந்நகரிலும் சிறிது மழை பொழிந்து மக்களை காக்க மக்கள் இங்குள்ள பாராசக்தி மாரியம்மனையும், அவரது சகோதரி வெயிலுகந்தமனையுமே நம்பியுள்ளனர்.