டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்தினார். டெல்லியில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு கோரினார். சந்திப்பின்போது ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் ஆகியோர் உடனிருந்தனர்.