சென்னை: தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை தொட்டிகள் மூடியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். குடிநீர்த் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு சுத்தமான குடிநீர் வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.