இந்திய விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக தந்தை மகள் ஒரே நேரத்தில் போர் விமானத்தை இயக்கியுள்ளனர். கர்நாடகாவின் பிதாரில் உள்ள இந்திய விமான படைத்தளத்தில் நடந்த பயிற்சியில் ஏர் காமொடராக பதவி வகிக்கும் சஞ்சய் சர்மாவும், பிளையிங் ஆபிசராக பயிற்சி பெற்று வரும் அவரது மகள் அனன்யா சர்மாவும் ஒரே நேரத்தில் போர் விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளனர். Hawk-132 ரக போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. போர் விமானத்தின் முன்பாக இவர்கள் இருவரும் கம்பீரமாக நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- Airplane
- Breaking News
- HighCourt
- india
- Madurai
- metropeople
- News
- NewsUpdate
- newsupdates
- Politics
- Social
- Tamilnadu
- TodayNews
- ஆட்டோமொபைல்
- தொழில்நுட்பம்
- வேலைவாய்ப்பு