மேஷம்: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.

மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்பாக செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். பழைய கடனில் ஒன்று தீரும்.

கடகம்: சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள்,சிறு குழப்பங்கள் வந்து போகும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தம் அடைவீர்கள்.

சிம்மம்: அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டு. பூர்வீக விட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்.

கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் நிலை சீராக அமையும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அதிக கவனம் தேவை.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். குழந்தைகளின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.

விருச்சிகம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

தனுசு: எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்கள். நெருங்கிய நபரிடம் உங்கள் மனக்குறையை சொல்லி ஆதங்கப்படுவீர்.

மகரம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொந்த – பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சிகிட்டும். ஆன்மிக சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

கும்பம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்திகள் வந்து சேரும். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.

மீனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும். பழைய வாகனத்தை விற்பனை செய்ய முயற்சிப்பீர்கள்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்