இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

டோக்யோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 4 பதக்கங்களை வென்றுள்ளது சாதனை படைத்துள்ள நிலையில், பதங்கங்களை பெற்ற ஒலிம்பிக் வீரர்களுக்கு பாமக நிறுவனர் மருததுவர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தகுதிச் சுற்றில் ஏழாம் இடம்பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார். இறுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட அவர் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மொத்தம் 249.6 புள்ளிகளை எடுத்த அவர் உலக சாதனையை சமன் செய்து அசத்தினார்.

இதேபோல் வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். 44.38 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்து அசத்தினார். இந்நிலையில், ஹரியானாவின் பகதுர்ஹாரில் யோகேஷ் கதுனியாவின் உறவினர்கள், குடும்பத்தினர் நடனம் ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் F46 பிரிவு போட்டியில் இந்தியா 2 பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளது. ஏற்கெனவே இந்தப் போட்டியில் 2 தங்கம் வென்றிருந்த இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா, 3ஆவது தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 64.35 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த அவர் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார்.

மற்றொரு இந்திய வீரரான சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கம் வென்றார். 67.79 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்த இலங்கையின் தினேஷ் பிரியன் தங்கப்பதக்கத்தை வென்றார். பதக்கங்கள் வென்ற அவனி லெகரா, யோகேஷ் கதுனியா உள்ளிட்டோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியா 4 பதக்கங்களை வென்றது இதுவே முதல்முறை; இந்தியா அதிக பதக்கங்களை வென்றிருப்பதும் இந்தப் போட்டியில் தான். இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளின் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகாரா, வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் யோகேஷ் கதுனியா, ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, சுந்தர்சிங்குக்கு வாழ்த்துகள்

இதேபோல பதக்கம் பெற்ற வீரர்களுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து பாரட்டு தெரிவித்து வருகின்றனர்.