“உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் தனது குண்டுகளால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த அமெரிக்க அதிபர் விளாடிமிர் புதினை ‘போர்க் குற்றவாளி’ என அழைப்பது ஏற்புடையதல்ல, மன்னிக்கக்கூடியதும் அல்ல” என்று ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

புதன்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “புதின் ஒரு ‘போர்க் குற்றவாளி’. ரஷ்யப் படைகள் மருத்துவமனைகளின் மீது தாக்குதல் நடத்துகிறது. மருத்துவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளது. உக்ரைன் அதிபர் அமெரிக்காவிடம் உதவிகளைக் கோரியுள்ளார். இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக வலுவான போராடத்தை முன்னெடுக்க ஆயுதங்களை வழங்கி உக்ரைனுக்கு உதவுவோம். உக்ரைனுக்கு ஸ்விட்ச் ப்ளேட் ட்ரோன்களை அளித்து ரஷ்யாவின் ராணுவ தளவாடங்களை துல்லியமாகக் கண்டறிந்து தாக்க உதவி செய்வோம்” என்று கூறினார்.

ரஷ்யா கண்டனம்.. இதற்கு ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கண்டனம் தெரிவித்துள்ளார். “உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் தனது குண்டுகளால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த அமெரிக்க அதிபர் விளாடிமிர் புதினை ‘போர்க் குற்றவாளி’ என அழைப்பது ஏற்புடையதல்ல, மன்னிக்கக்கூடியதும் அல்ல” என்று அவர் கூறினார்.

முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிரி புதின் ‘போர்க் குற்றவாளி’ என்ற தீர்மானத்தை ஏக மனதாக அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானத்தை குடியரசுக் கட்சி எம்.பி. லிண்ட்ஸே கிரஹாம் முன்மொழிந்தார். இதனை குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அனைவருமே ஆதரித்தனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபரும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். உலகத் தலைவர்கள் பலரும் புதினை ‘போர்க் குற்றவாளி’ எனக் கூறி அமெரிக்க அதிபர் பைடன் மட்டும் தயக்கம் காட்டினார். அவ்வாறு அழைக்க சில சர்வதேச விசாரணைகள் நடைபெறுவது அவசியம் என்று கூறிவந்தார். இந்நிலையில், புதன்கிழமை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “புதின் ஒரு ‘போர்க் குற்றவாளி’ என்று முதன்முறையாக வெளிப்படையாகக் கூறியுள்ளார்.