கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் வந்தியத்தேவன் வாயிலாக கூறப்பட்டிருக்கும். அந்த கதாபாத்திரத்தை  பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி ஏற்று நடித்துள்ளார்.

அந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்ற நடித்துள்ள கார்த்தியின் கதாபாத்திரத்தை பட குழுவினர் இன்று புதிய போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளனர்.

செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்திற்கான புரமோஷன் வேலைகளை பட குழுவினர் தொடங்கியுள்ளனர்.  அதில் சில தினங்களுக்கு முன்பாக இந்த வாரம் முழுவதும் பொன்னியின் செல்வன் தகவல்கள் வெளியாகும் என கூறியிருந்தனர்.

அந்த வகையில் நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான ஆதித்ய கரிகாலனின் தோற்றத்தை வெளியிட்டனர்.  அதைத்தொடர்ந்து இன்று வந்திய தேவன் கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர்.

கல்கி நாவலில் ஆதித்ய கரிகாலன் தன்னுடைய தந்தைக்கு வந்தியதேவன் மூலமாக செய்தி அனுப்புவார்.  அதைக் கொண்டு செல்லும் வழியில் வந்தியதேவன் சந்திக்கும், பார்க்கும் ஒவ்வொரு சம்பவங்களும் மிக சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கும்.அந்த வகையில் கார்த்தியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் கார்த்தியின் மூலமாகவே நகரும்.

இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டவர்களின் கதாபாத்திரங்களின் தோற்றமும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ளன. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்ச அளவில் தயாரித்துள்ளது குறிப்பிடதக்கது.