இயக்குநர் பா.இரஞ்சித் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை 2022’ சென்னையில் நாளை (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கடந்த 2020 மற்றும் 2021-ல் ‘மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகளை சென்னை, மதுரை மற்றும் கோவையில் நடத்தியது. இதில் 500-க்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள்,100-க்கும் மேற்ப்பட்ட திரைபட பிரபலங்கள் கலந்துகொண்டனர். மக்களிடையே வரவேற்பை பெற்று வரும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு சென்னையில் நடைபெறுகிறது. நாளை (டிசம்பர் 28) தொடங்கி 29,30 என மொத்தம் 3 நாட்கள் சென்னை சேத்துப்பட்டில் உள்ளசர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கான்சர்ட் ஹாலில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியின் முதல் நாளான 28-ம் தேதி நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் பாடல்கள் மேடையில் அரங்கேற்றப்படுகின்றது. இரண்டாவது நாளான 29-ம் தேதி ஹிப் ஹாப் இசையும், கானாப் பாடல்களும் இடம்பெற உள்ளன. மேலும் நிகழ்ச்சியின் கடைசி நாளான 30-ஆம் தேதி ஒப்பாரி பாடல்கள் , விடுதலைக்கான எழுச்சிமிகு பாடல்கள் மேடையேற்றப்படுகின்றது. மேலும் இந்த நிகழ்ச்சிகளை முன்பதிவு செய்து கட்டணமில்லாமல் காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.