மதுரை: அய்யன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் ஆய்வு செய்யும்போது, பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கடி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் திடீர் ஆய்வு செய்து வருகிறார். இதன்படி இன்று காலை மதுரை, வாடிப்பட்டி அருகே அய்யன் கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு இருந்த இருந்து வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். மேலும், மருத்துவமனையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மருத்துவர் பூபேஷ்குமார் பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத தெரியவந்தது.
இது தொடர்பாக அங்கிருந்த பணியாளர்களிடம் அமைச்சர் மருத்துவர் எங்கே என்று கேட்டார். அப்போது மருத்துவர் 2 மணி நேரம் தாமதமாக வருவதாக தகவல் தெரிவித்துள்ளார் என்று அங்கிருந்தவர்கள் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பணியில் இல்லாத மருத்துவர் பூபேஷ்குமாரை மீது நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.