10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த/வருகை புரியாத தேர்வர்கள் துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ’நடந்து முடிந்த 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத, தேர்வு வருகை தராத மாணவர்கள், தேர்ச்சி பெறாது பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 27.06.2022 (திங்கட்கிழமை) முதல் 04.07.2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (03.07.2022 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, தனித்தேர்வர்கள் 27.06.2022 (திங்கட்கிழமை) முதல் 04.07.2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (03.07.2022 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.