சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை கனமழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று (ஆக. 21) ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், உள் மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (ஆக. 21) அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று (ஆக. 21) அதிகாலை முதலே விருதுநகர் மாவட்டத்தின் நகர் பகுதிகள், அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணிநேரத்துக்கும் கனமழை பெய்தது. பின்னர் அது லேசான மழையாக தொடர்ந்தது.

சென்னையில் அண்ணாநகர், கே.கே.நகர், வில்லிவாக்கம், சேப்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் கனமழை பெய்து, அது பின்னர் லேசான மழையாக தொடர்கிறது.

கடலூர் மாவட்டத்தின் சுற்றுப்பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அதேபோன்று, கள்ளக்குறிச்சி, செஞ்சி, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

#Metro_People #Rain #Chennai #Weather #NewsUpdates #todaynews #சென்னைஉள்ளிட்டபல்வேறுமாவட்டங்களில்பரவலாக_கனமழை