கேரள மாநிலத்தில் அதிகன மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் கண்ணூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பை, மணிமாலா மற்றும் அச்சன்கோவில் உள்ளிட்ட ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளது.

பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு அணைகளில் நீர் அபாய அளவை எட்டியுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் எந மத்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கேரளத்தில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த சில நாட்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.