பத்மஸ்ரீ விருது பெற்ற சாலமன் பாப்பையாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

2021-ம்ஆண்டுக்கான பத்ம விருது வழங்கும் விழா நேற்று நடை பெற்றது.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர்மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். காலையில் பாதி பேருக்கும் மாலையில் மீதி பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக் கொண்டார்.

தமிழகத்தை சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, இயற்கை விவசாயி பாப்பம்மாள், கூடைப்பந்து வீராங்கனை அனிதா,பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பிரபல பின்னணிப் பாடகி சித்ராவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களுக்கு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற சாலமன் பாப்பையாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கல்லூரி நாட்கள் முதல் என் பல குரல் நிகழ்ச்சியை உங்கள் குரலில்தான் தொடங்குவேன், என்றும் உங்கள் ரசிகனாக என் மனமார்ந்த வாழ்த்துகள் அய்யா’ என்று வாழ்த்தியுள்ளார்.