பாரத ஸ்டேட் வங்கியில் 1,226 அதிகாரி காலி பணியிடங்களுக்கு டிச.29-க்குள் விண்ணப்பிக்கலாம்.

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்,வட்டார அளவில் 1,226 அதிகாரி காலி பணியிடங்கள்நிரப்பப்பட உள்ளன. இப்பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், மாத ஊதியம், சலுகைகள்,விண்ணப்ப படிவம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் https://bank.sbi/careers என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரும் 29-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

இதுதொடர்பாக தகவல் தேவைப்பட்டால் மேற்கண்டஇணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.