தமிழ்நாடு அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணிகளின் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத் துறையின் செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. இந்தக் குழுவில் நித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர், சட்ட விவாகரங்கள் துறை செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த உயர்மட்ட குழுவானது பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான துணைக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.