புதுடெல்லி: நடப்பு 2022-ம் ஆண்டின் மிகச்சிறந்த மதிப்புமிக்க 10 இந்திய நிறுவனங்களை இங்கிலாந்தை சேர்ந்த பிராண்ட் பைனான்ஸ் (பிஎப்) அமைப்பு பட்டியலிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
டாடா (2,400 கோடி டாலர்), இன்ஃபோசிஸ் (1,300 கோடிடாலர்), ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் (860 கோடி டாலர்), ஏர்டெல் (770 கோடி டாலர்), எஸ்பிஐ (750 கோடி டாலர்), ஹெச்டிஎப்சி வங்கி (690 கோடி டாலர்), விப்ரோ (640 கோடி டாலர்), மஹிந்திரா (610 கோடி டாலர்), ஹெச்சிஎல் (610 கோடி டாலர்) மதிப்பு கொண்டவையாக விளங்குகின்றன.
டாடா குழுமத்தின் பிராண்ட் மதிப்பு 12 சதவீதம் உயர்ந்து 2,400 கோடி டாலரைத் தொட்டுள்ளது. 35 நாடுகளில் 30 துறைகள் குறித்த கணிப்பை இந்நிறுவனம் நடத்தியுள்ளது. ஏறக்குறைய ஒரு லட்சம் பேரிடமிருந்து கருத்துகள் பெறப் பட்டுள்ளன. டாடா குழுமத்தின் தாஜ் ஹோட்டல்ஸ் பிராண்ட் மதிப்பு 6 சதவீதம் உயர்ந்து உள்ளது.
இந்தியாவின் 10 முன்னணி நிறுவனங்களாக தாஜ், ஹெச்டிஎப்சி வங்கி, ஜியோ, அமுல், எல்ஐசி, எம்ஆர்எப், பிரிட்டானியா, தனிஷ்க், ஏர்டெல், மாருதி சுஸுகி ஆகியவை இடம்பெற்றுள்ளன. வங்கித் துறையில் பாரத ஸ்டேட் வங்கி தெற்காசிய பிராந்தியத்தில் முன்னணி பிராண்டாக 29 சதவீத வளர்ச்சியுடன் 750 கோடி டாலர் மதிப்பை பெற்றுள்ளது.