வெளி மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து போதை பொருட்களை கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் கஞ்சா விற்பனையை முழுமையாக ஒழிக்க வேலூர் மாவட்ட காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப்பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரு கின்றனர். மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்தும், டோல்கேட் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோத னையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வேலூர் மாவட்டம் வழியாக போதை பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில், பள்ளிகொண்டா காவல் துறையினர் கொல்லமங்கலம் பகுதியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரவு, பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கொல்லமங்கலம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி ஒன்று நின்றிருந்தது.