குக் வித் கோமாளி’ புகழ் ஹீரோவாக நடிக்கும் ‘மிஸ்டர்.ஜு கீப்பர்’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அறியப்பட்டவர் புகழ். இப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சந்தானத்தின் ‘சபாபதி’ அஜித்தின் ‘வலிமை’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இதேபோல், ‘யானை’ உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

இப்போது ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் புகழ். 2000-ல் மாதவனின் ‘என்னவளே’, 2002-ல் மம்மூட்டி நடித்த ‘ஜூனியர் சீனியர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜெ.சுரேஷ் இயக்கவுள்ள புதிய படத்தில்தான் ஹீரோவாக புகழ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்துக்கு ‘மிஸ்டர்.ஜு கீப்பர்’ எனப் பெயர்வைக்கப்பட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஹீரோயினாக டிக்கிலோனா படத்தில் நடித்த ஷிரின் நடிக்கவுள்ளார். நேற்று முதல் இதன் ஷூட்டிங் ஊட்டியில் தொடங்கியுள்ளது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்கவுள்ளது.

நேற்று நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டார் புகழ். இது இப்போது வைரலாகி வருகிறது.