வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குவளை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கீழடி, சிவகளை, மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் இந்த ஆண்டில் புதிதாக அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அகழ்வாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை வெம்பக்கோட்டையில் நுண்கற்கருவிகள், சங்ககால மண்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடுகள், கிளிஞ்சல்களால் ஆன வளையல்கள் யானையின் கடைவாய்ப்பல் ஆகியவை புதைபடிம வடிவில் ஆகியவைகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில், வெம்பக்கோட்டையில் புதிதாக 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குவளை கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

http://https://twitter.com/TThenarasu/status/1526158305499807744?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1526158305499807744%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindutamil.in%2Fnews%2Ftamilnadu%2F800638-a-2-000-year-old-mug-found-in-the-vembakkottai-excavations.html

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள, சுடுமண்ணால் ஆன, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட, காலத்தால் அழியாத கலை நயம் மிக்க கண்கவர் குவளை.❤️” என்று தெரிவித்துள்ளார்.