சென்னை: மேற்கு வங்கத்தில் இருந்து ஹெராயினை கடத்திவந்து சென்னையில் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை  குரோம்பேட்டை, நகல்கென்னி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஹெராயின் போதைப் பொருள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் பம்மல் பகுதியில் வட மாநிலத்தவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்பொழுது அங்கே 60 கிராம் எடைகொண்ட ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 3 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இருந்து ஹெராயினை கொண்டு வந்து சென்னையில் விற்பனை செய்து வந்ததும் உறுதியான நிலையில். போலீசார் மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.