டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடிகை கஜோல் தனியுரிமை பாதுகாப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கில், தன்னுடைய பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

நடிகை கஜோல் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வணிக லாபத்திற்காக நடிகை கஜோலின் பெயர், ஏஐ புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் உருவத்தை ஒத்த ஏஐ புகைப்படங்களை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக இதேபோல், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி சிரஞ்சீவி, நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பச்சான் தொடந்த வழக்கிலும் இதே தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
