திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி முன்னிட்டு வரும் மே 30-ம் தேதி கிரிவலம் வர உகந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மலையே மகேசனாக எழுந்தருளி காட்சி தரும் திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தநேரம் வரும் மே 30-ம் தேதி பகல் 12.30 மணிக்கு தொடங்கி 31-ம் தேதி பகல் 2.41 மணிக்கு நிறைவடைகிறது.
எனவே வரும் 30-ம் தேதி சனிக்கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கோடை விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் அமைந்திருப்பதால் பவுர்ணமிக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதோடு சமீககாலமாக பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. வரும் பவுர்ணமி அன்று கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதையொட்டி கிரிவல பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் விரிவாக செய்திட மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் திட்டமிட்டுள்ளது. மேலும் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யதேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
