IPL 2026: சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த ஆயுஸ் மாத்ரே

IPL 2026: சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த ஆயுஸ் மாத்ரே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பேட்டர் ஆயுஸ் மாத்ரே 29 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 2வது லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆயுஷ் மாத்ரே மூன்றாவது வீரராக விளையாடினார். தொடக்க வீரர் சாம்சன் 7 ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சிஎஸ்கே அணி 14 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

இதையடுத்து, மூன்றாவது வீரராக விளையாடிய ஆயுஷ் மாத்ரே அதிரடியான ஷாட்களை ஆடி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் மளமளவன உயர்ந்தது. பவுண்டரி, சிக்சர் என பறக்க விட பஞ்சாப் அணி பவுலர்கள் தடுமாறினர்.

29 பந்துகளை எதிர்கொண்ட அவர் அரை சதம் விளாசினார். இதில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும். சுழற் பந்துவீச்சு வேகப்பந்து வீச்சு என அனைத்தையும் அடித்து ஆடினார். இதன் மூலம் ஆயுஷ் மாத்ரே ஒரு மகத்தான சாதனையை உடைத்து இருக்கிறார்.

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் இளம் வயதில் அரைசதம் விளாசிய வீரர் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக சிஎஸ்கே அணி ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா, தனது 21 வயது 148 நாட்களில் சிஎஸ்கே அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் முதல் அரை சதம் அடிக்க ஆயுஷ் மாத்ரே, அதனை 18 வயது 261 நாட்களில் அடித்து முறியடித்திருக்கிறார்.