பட்டதாரி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு: 2 அதிகாரிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பட்டதாரி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு: 2 அதிகாரிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சி: பட்டதாரி ஆசிரியரிடம், 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றிய சந்திர சேகரன், 65, தேவதாஸ், 61, ஆகிய இருவருக்கும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, பாலகிருஷ்ணன்பட்டி அரசு ஆதிதிராவிடர் உயர் நிலைப்பள்ளியில் பட்ட தாரி ஆசிரியராக பணி யாற்றியவர் கண்ணன்.

இவர் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்யாமல் இருக்க, திருச்சி மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், அலுவலர் தேவதாஸ் ஆகியோர் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.

இதுகுறித்த புகாரில், கடந்த, 10.08.2009 அன்று லஞ்சப்பணத்தை வாங்கிய அலுவலர்கள் சந்திர சேகரன், தேவதாஸ் ஆகியோர், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து, நேற்று நீதிபதி புவியரசு தீர்ப்புஅளித்தார்.

அதில், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் சந்திரசேகரன், தேவதாஸ் ஆகிய இருவருக்கும், 3 ஆண்டுகள் சிறை தண் டனையும், 20,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.