தனிக்கட்சி, அரசியல் என்று திசைமாறிய சிரஞ்சீவி, அரசியல் நமக்கு சரிவராது என்று பட்டுத்தெளிந்து மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய போது அவர் 149 படங்கள் நடித்திருந்தார்.

அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கயிருக்கிறார். இதையடுத்து மேலும் ஒரு அஜித் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

தனிக்கட்சி, அரசியல் என்று திசைமாறிய சிரஞ்சீவி, அரசியல் நமக்கு சரிவராது என்று பட்டுத்தெளிந்து மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய போது அவர் 149 படங்கள் நடித்திருந்தார். 150-வது படமாக, கத்தி படத்தை ரீமேக் செய்தார். அடுத்து சைரா நரசிம்மரெட்டி. அதையடுத்து ஆச்சார்யா படத்தில் நடித்து முடித்துள்ளார். 153-வது படமாக காட்ஃபாதர் தயாராகிறது. இது மலையாள லூசிபரின் தெலுங்கு ரீமேக்.

இதையடுத்து பல படங்கள் சிரஞ்சீவி நடிப்பில் உருவாக உள்ளன. அதில் ஒன்று அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமேக். இதில் லட்சுமி மேனன் நடித்த வேடத்துக்கு சாய் பல்லவியிடம் கேட்டிருந்தனர். இந்நிலையில், அஜித்தின் என்னை அறிந்தால் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க சிரஞ்சீவி திட்டமிட்டுள்ளார். கௌதம் மேனன் இயக்கிய இந்தப் படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருந்தார். இந்த ரீமேக்கை இயக்க தெலுங்கின் முன்னணி இயக்குனர்கள் மாருதி, வெங்கி குடுமுலா இருவரும் தயாராக இருக்கிறார்கள். சிரஞ்சீவி யாரை டிக் அடிக்கப் போகிறார் என தெரியவில்லை.

வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்க ரீமேக் படங்கள் தான் ரிஸ்க் இல்லாத வழி என சிரஞ்சீவி நினைக்கிறார். அதனால், மேலும் பல ரீமேக்குகள் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவரலாம்.