அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.9) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். இதன்படி காலை.10.50 மணி வரை ஆளுநர் தனது உரையை வாசித்தார். உரை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.
இதன்பிறகு பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று குற்றச்சாட்டினார். அவர் பேசுகையில்,”தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது” என்று தெரிவித்து இது தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரைவில் நிறைவேற்றப்பட்டது.