சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்த்தி ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. முன்னணி ஸ்கேன் நிறுவனமாக இயங்கி வரும் இந்நிறுவனம், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வடபழனியில் உள்ள கார்ப்பரேட் அலுவலம் உள்பட தமிழகத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.