இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 161.16 கோடியைக் கடந்தது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 67 லட்சத்துக்கும் அதிகமாக (67,49,746) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 161.16 கோடியைக் (1,61,16,60,078) கடந்தது. 1,73,78,364 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,42,676 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,63,01,482. ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 93.31 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,37,704 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கோவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21,13,365 ஆக உள்ளது; நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 5.43 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,60,954 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 71.34 கோடி கோவிட் பரிசோதனைகள் (71,34,99,892) செய்யப்பட்டுள்ளன.

வாராந்திரத் தொற்று 16.65 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 17.22 சதவீதமாக பதிவாகியுள்ளது.