திருவள்ளூர்: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் 2-வது வெள்ளிக்கிழமை மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளன. இதில், 30-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, ஐடிஐ படித்தவர்களை தேர்வு செய்ய உள்ளன.

எனவே, விருப்ப முள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இம்முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது என திருவள்ளூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here