நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் 6 வருடங்களாக காதலித்து இப்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். இவர்கள் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடக்கிறது. அங்கு திருமணத்துக்காக பிரத்யேகமாக விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைத்துள்ளனர். ஓட்டலில் விருந்தினர்களுக்காக அதிக அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.

திருமணம் நடைபெறும் கடற்கரை விடுதியின் முன்புறம், கடற்கரைப் பகுதி என அனைத்து இடத்திலும் 80க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில்

ஈடுப்பட்டுள்ளனர். நடிகை நயன்தாராவின் திருமணம் இன்னும் சற்று நேரத்தில் மாமல்லபுரம் அருகில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொடங்க இருக்கின்றது.

மண்டபத்திற்கு உள்ளே மட்டுமின்றி , மண்டபத்திற்கு பின்புறம் கடற்கரை வழியாக யாரும் உள்ளே நுழைய கூடாது என்பதற்காகவும், புகைப்படம் எடுத்துவிட கூடாது என்பதற்காகவும் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மண்டபத்தின் உள்ளேயும் விருந்தினர்கள் யாரும் புகைப்படம் எடுத்துவிடாமல் இருப்பதற்காக பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மடிப்பாக்கம் மீனாட்சி சுந்தரேஷ்வர் கோயில், சென்னை காளிகாம்பாள் கோயில், நங்கநல்லூர் கருமாரி அம்மன் கோயிலை சேர்ந்த 15 புரோகிதர்கள் நயன்தாரா திருமணத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

காலை 8.30 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக திருமண நடைபெற உள்ளது. உள்ளே செல்ல கூடிய நபர்களின் செல்போன் கேமராக்கள் முழுவதுமாக மறைக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ரஜினிகாந்த், விஜய், அஜித், பிரபு, விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்தில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சென்னை வந்துள்ளார். மேலும் இயக்குனர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், நடிகர் ஜெயம்ரவி, இயக்குனர் மோகன் ராஜா, கலா மாஸ்டர் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், நடிகை சரண்யா பொன்வண்ணன், பொன்வண்ணன், இயக்குனர் சிவா, கேமராமேன் வெற்றி, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, நடிகர் வசந்த், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சரத்குமார், நடிகர் விஜய்சேதுபதி தனது மகளுடன் வருகை புரிந்தார்.

மேலும் பிரபல தயாரிப்பாளர் போனிகபூர், பாலிவுட் நடிகர் ஷாருக் கான், கார்த்தி, விக்ரம் பிரபு, இயக்குனர் கௌதம் மேனன் ஆகிய முக்கிய திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். VVIP கள் தவிர்த்து மற்ற அனைவரும் QR Code ஸ்கேன் செய்து சரிபார்க்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் 10.25 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி நடிகை நயன்தாராவை கரம் பிரடித்தார் விக்னேஷ் சிவன்