மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 59,891ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 100 புள்ளிகள் உயர்ந்து 17,750 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. இன்றைய வர்த்தகத்தின் காலை 09:26 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 332.01புள்ளிகள் உயர்வுடன் 59,875.97 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் 115.05 புள்ளிகள் உயர்ந்து 17,771.40 ஆக நிலைகொண்டிருந்தது.
உலக அளவில் கலப்பு சந்தை போக்குகளுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனேயே தொடக்கம் பெற்றன. நிஃப்டி 100 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து இருந்ததால் இந்திய சந்தைகளும் 1 சதவீதம் வரையில் ஏற்றம் கண்டிருந்தது.
எஃப்எம்சிஜி மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தோர் பிளான்டில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதால் டாபர் பங்குகள் 2 சதவீதம் வரை அதிகரித்திருந்தது. இன்றைய வர்த்தகத்தில் டாட்டா ஸ்டீல்ஸ், ஹெச்டிஎஃப்சி, ரிலையண்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், எல் அண்ட் டி, விப்ரோ நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஐடிசி, இந்துஸ்தான் யுனிலிவர் பங்குகள் சரிவைச் சந்தித்திருந்தன.