ஆடவருக்கான டி 20 உலகக் கோப்பைகிரிக்கெட் தொடர் வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இதன் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 23-ம்தேதி மெல்பர்ன் நகரில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கடந்த உலகக் கோப்பையை போன்று இம்முறையும் பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன்ஷா அப்ரிடி, இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான கதவும் கம்பீர் கூறியதாவது:

டி 20 உலகக் கோப்பை தொடரில் ஷாஹீன்ஷா அப்ரிடி பந்து வீச்சில் தப்பித்தால் போதும் என நினைக் கூடாது.அவருக்கு எதிராக ரன்கள் எடுக்க வேண்டும். ஏனெனில் தப்பித்தால் போதும் என்று களத்தில் நிற்கும் தருணத்தில், அனைத்துமே சிறியதாகிவிடும். வெளிப்படையாக கூற வேண்டுமெனில் டி 20 கிரிக்கெட்டை தப்பித்தால் போதும் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது.

ஷாஹீன்ஷா அப்ரிடி புதிய பந்தில் ஆபத்தானவர் என்று எனக்குத் தெரியும், ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் அவருக்கு எதிராக ஆக்ரோஷமான முறையில் அதிக ரன்களை எடுக்க வேண்டும், சிறந்த நிலைக்கு வர வேண்டும். பந்துகளை அடிப்பதைக் காட்டிலும் நன்கு கவனிக்க வேண்டும். ஷாஹீன் ஷா அப்ரிடியை எதிர்கொள்ளக்கூடிய தரமான 3 அல்லது 4 வீரர்கள் இந்திய அணியின் டாப்ஆர்டரில் உள்ளனர். இவ்வாறு கவுதம் கம்பீர் கூறினார்.