அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை படத்தின் ‘விசில் தீம்’ வெளியிடப்பட்டுள்ளது.
அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் விசில் தீம் வெளியிடப்பட்டுள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. முன்னதாக ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதோடு படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. செப்டம்பர் இறுதியில் வலிமை படத்தின் க்ளிம்ப்ஸும் வெளியானது
இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் ‘விசில் தீம்’ வெளியிடப்பட்டுள்ளது. பிஜிஎம் கிங் என்றழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திலும் அற்புதமான அனுபவத்தைத் தருவார் என காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.